பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
வட்டார வள மையங்களில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த 47
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
நிலையில் இருந்த 17 ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் அரசு மேல்நிலைப்
பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்
டிசம்பர் 28-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வும் நடைபெறும்
என அவர் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில். டிசம்பர் 28-ம் தேதி காலை 9 மணிக்குநடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில்பாடவாரியாக இடம்பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை வருமாறு
இயற்பியல் -7
கணக்கு -4
விலங்கியல்b -3
தாவரவியல் -5
வேதியியல் -3
தமிழ் -2
பொருளியல் -9
வணிகவியல் -3
வரலாறு -3
ஆங்கிலம் -6
என 46 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக