புதன், 25 டிசம்பர், 2013

போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் பொருளாதார பிரிவு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக புதிய இணையதளம்


இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால்
சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி,
கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக்
கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும்,
பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

 இந்த சூழ்நிலையில் TRB, NET, SET, UPSC மற்றும் TNPSC போன்ற
போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் பொருளாதார பிரிவு மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகளுக்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
www.economicsquestionsandanswers.com என்ற இணையதளத்தில்
பல்வேறு பொருளியல் சார்ந்த தேர்வுகளுக்கானகலைத்திட்டம், தேர்வு வரைமுறைகள்,
பாடநூல், வினா வடிவமைப்பு,வினாவங்கி, இதுவரை நடைபெற்ற அனைத்து
தேர்வுகளுக்குமான தேர்வுத் தாள்கள் மற்றும் விடைகள் (தமிழ் மற்றும் ஆங்கில வழியில்)
மற்றும்
பொருளியலுக்கான அரிய பல சிறப்பு தகவல்களான பொருளாதார
அறிஞர்கள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், பொருளாதார அறிஞர்கள் படைத்த நூல்கள்,
இதுவரை நோபல்பரிசு பெற்ற பொருளியல்
அறிஞர்களில் விபரங்கள், வளரும் வளர்ந்த நாடுகள் பற்றிய தகவல்கள்,
இதுவரை நடைபெற்ற ஐந்தாண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்ட தலைவர்கள்
மற்றும் துணைத்தலைவர்கள் பற்றி செய்திகள், இந்தியாவில்
நடைமுறைப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புத் திட்டங்கள் மற்றும் அதன்
நோக்கங்கள், பல்வேறு பரிசீலனைக்குழுக்களும் அதன் விபரங்களும், முக்கிய
பொருளாதார நிகழ்வுகள், தேசிய வருமான கணக்கீட்டு முறைகள்,
பொருளியல் சார்ந்த சூத்திரங்கள், நிதிக்குழு பற்றிய முக்கிய தகவல்கள்,
கிராமப்புற, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள்
பற்றிய தகவல்கள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளுக்கும்
பாட வாரியாக ஒரு மதிப்பெண்வினாக்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்
சிறந்த பொருளியல்பாட வல்லுநர்கள், தனி சிறப்பு வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த பாட
நூர்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட வினாக்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட
அனைத்து தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பார்த்து பயன் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக