. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் . சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு இரண்டு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஜாய்ஸ் சுகிர்தா ராணி உள்ளிட்ட இருவர் தாங்களும் முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பிழையான பி வரிசை வினாத்தாளினால் பாதிக்கப்பட்டோம்.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித முடிவும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கிடா உத்தரவிடவேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று 19.12.13 மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லூயிஸ் அஜாரானார் .வழக்கினை விசாரித்த நீதிபதி 3 வாரக்காலத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக