சனி, 21 டிசம்பர், 2013

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடல் தகுதித் தேர்வு. டிச.30, 31ல் நடத்த முடிவு


தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர்
படைக்கான உடல் தகுதித் தேர்வு ஜன., 6ல் நடப்பதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது,முன்கூட்டியே 
டிச.30, 31ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர்படைக்கு ஆட்கள்
சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் செப்., 2 முதல்
வழங்கப்பட்டது. இதற்கு பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மாநிலம்
முழுவதும் 10,500 பேர் தேர்வு எழுதினர். மாத
மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும். வயது
 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் போலீஸ்
வாகனங்களை ஓட்டுதல், அலுவலககடிதங்களை 
பட்டுவாடா செய்தல், கம்ப்யூட்டர் விவரப்
பதிவு பணிகள், போலீசார் குடியிருப்புகளை பராமரித்தல், 
விபத்தில் உயிர்ப்பலிகள் ஏற்படா வண்ணம் 
தடுக்கும் பணி உட்பட பல பணிகள்
ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த நவ.,10 ல்
எழுத்து தேர்வு நடந்தது. தமிழ்நாடு போலீஸ்
சிறப்பு இளைஞர்படைக்கு ஒரு பணியிடத்திற்கு
 நான்கு பேர் வீதம் எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடல் தகுதி தேர்வில் மார்பளவு, உயரம்,
400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்,கயிறு ஏறுதல்
உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. உடல்
தகுதித்தேர்வு 2014 ஜனவரி 6ல் நடைபெறும் என,
அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணிக்காகன 
ஆணவங்கள், போலீசார் பாதுகாப்பு விஷயங்கள்
குறித்து ஆலோசனைகள் செய்ய வேண்டியுள்ளதால்,
உடல் தகுதித்தேர்வு முன் கூட்டியே வரும் டிச.30, 31ல்
 நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக