தென்னிந்தியாவின் மற்ற நகரங்களில் இருக்கிற அளவிற்கு சென்னையில் வேலைவாய்ப்புகள் இல்லை. வேலை வாய்ப்புகளை வழங்கு வதில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது என்று ‘டீம்லீஸ்' எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரி விக்கிறது.
இந்த ஆய்வை நடத்திய டீம்லீஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரிதுபர்னா சக்கரவர்த்தி, சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-
தமிழகத்தில் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு ஐ.டி மற்றும் உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் சில்லறை வர்த்தகம், உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.இருந்தா லும் அரசிற்கு வருவாய் அளிக்க கூடிய தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை,பொறியியல் துறைக ளில் போதுமான அளவு வேலைவாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகத்தில் இருக்கையில் தமிழகத்தில் மட்டும் இத்துறையில் சொற்ப வேலைவாய்ப்புகளே உள்ளன. இவற்றை வைத்து பார்க்கையில், வேலை வாய்ப்புகளை வழங்கு வதில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது.
தென்னிந்தியாவின் மற்ற நகரங்களில் இருக்கிற அளவிற்கு சென்னையில் வேலைவாய்ப்புகள் இல்லை. இங்கே மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி அடைகிறார்கள்.ஆனால் வேலை என்று வருகிற போது வெறும் ஏட்டுப்படிப்பு மட்டும் கை கொடுக்காது. படிப்பை தாண்டி திறன் மேம்பாட்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தான் வேலைவாய்ப்புகள் அமையும். பெருநிறுவனங்களின் போக்கு முற்றிலும் மாறிவருகிறது. பொரு ளாதார மந்த நிலை குறைந்து விட்டது. எனவே மாணவர்கள், பாடத்தை தவிர்த்து திறன் வளர்ச்சிக்காகவும் கூடுதலாக உழைக்க வேண்டும். அப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக