திங்கள், 16 ஜூன், 2014

ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிப்பு :அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்

ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிப்பு :அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்
அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.
தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.பொறியியல் கல்லூரிக ளில் உதவி பேராசிரியர் பணியி டங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையாளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து கிறது.

இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இப்பணியிடங் களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலை யில் வெளியிட முடிவு செய்யப் பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

.பொறியியல் அல்லாத 220 பணியிடம்
பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கி லம், கணிதம், இயற்பியல், வேதி யியல் உள்ளிட்ட பொறியியல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகை யில், பொறியியல் அல்லாத பாடப் பிரிவு இடங்கள் பாலிடெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதி, வயது வரம்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணு டன் முதுநிலை பட்டம் அவசியம். அதோடு, யுஜிசி 'நெட்' அல்லது 'ஸ்லெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரி யர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக