திங்கள், 9 டிசம்பர், 2013
""பிளஸ் 2 பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார். அவர் கூறியதாவது: அனைத்து பள்ளிகளிலும், 10 ம் வகுப்பு வரை, தமிழை மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் பாடவேளையில், நல்லொழுக்க கல்வி கற்பிக்க வேண்டும். கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின், பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். ஒன்பது மற்றும் 10 ம் வகுப்புகளுக்கு, முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த, அனைத்து வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறையை, நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தை, மேல்நிலை வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கருதி, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, அறிவித்த தேதியில் இருந்து, தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் முன்வரவேண்டும், என்றார். J
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக