வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல்
குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, 242 பக்க
குற்றப்பத்திரிகையை, கோவை, சி.பி.சி.ஐ.டி.,
போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தமிழகத்தில்,
2012 ஆகஸ்டில் நடந்த குரூப் 2 தேர்வில்,
தேர்வுக்கு முன்பே, ஈரோடு, தர்மபுரி மாவட்டம்,
கம்பையநல்லூரில் வினாத்தாள் வெளியானதால்,
தேர்வு ரத்தானது. தனக்கொடி, செந்தில் உட்பட,
எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். பின்,
இவ்வழக்கு கோவை, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு
மாற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான,
நாகை மாவட்ட வணிக வரித்துறை துணை கமிஷனர்
ரவிகுமார், சென்னை வணிக வரித்துறை துணை கமிஷனர்
ஞானசேகரன் மற்றும் முக்கிய குற்றவாளியான அச்சக
உரிமையாளர், ரிஷிகேஷ் குண்டுவை போலீசார்
கைது செய்தனர். கடந்த, 16 மாதங்களுக்கு பின், சி.பி.சி.ஐ.டி.,
போலீசார், நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் முதல்
குற்றவாளியாக அச்சக உரிமையாளர் ரிஷிகேஷ்
குண்டு சேர்க்கப்பட்டுள்ளார். 30 பேர் குற்றவாளிகளாகவும்,
90 பேர் சாட்சியங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வினாத்தாள் வெளியானதாக புகார் தெரிவித்து சிக்கிய,
பவானியை சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி,
30வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
242 பக்க குற்றப்பத்திரிகையை, கோவை, நீதிமன்றத்தில்
சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தாக்கல் செய்து, குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கும் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக