தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,
385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை
அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக
நியமித்துள்ளது. இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள்.
கடந்த 2000ல் துவங்கியஎஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையி 3
ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கலைத்து,
அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,)
திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனித
வள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள்
முடிய வேண்டும். சிலகாரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம்.
தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில்,
இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக