இதற்கிடையே மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதால் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை திட்டத்தில் இருந்து நீக்குவது தொடர்பான எவ்வித முடிவும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், சீனியாரிட்டி அடிப்படையில், ஆண்டுதோறும், ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேர், "ரெகுலர்' பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.
இத்திட்ட மேற்பார்வையாளர்களை "ரெகுலர்' பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்தால், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு "பேனலில்' உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், மாநிலம் முழுவதும் 500 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை, "பேனலில்' உள்ள தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் நிரப்ப வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்களை "ரெகுலர்' பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக் கூடாது. இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்
NEWS COURTESY :TAMILNADU TEACHER'S NEWS BLOG
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக