ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பழங்குடியின பிரிவில் "குறும்பர்' இருக்கிறதா? சென்னை உயர்நீதிமன்றம்....


 ஜனாதிபதியின் அறிவிப்பாணையில், "குறும்பர்' என்கிற ஜாதியே இல்லை' என,
சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை, வருவாய் கோட்ட
அதிகாரியிடம், மணி, சம்பத் ஆகியோர், இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குரும்பன் இன சான்றிதழ் கேட்டு மாவட்ட கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தனர். குரும்பர் என்றுதான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறி அந்த விண்ணப்பத்தை அவர் நிராகரித்தார்.  இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், இருவரும் மனுத் தாக்கல்செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுதாகர்,புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:   குரும்பர் மற்றும் குரும்பன் என்பதில் பெயர்க் குழப்பம் உள்ளது. மேலும் இந்த இனத்தவருக்கு பட்டியல் இனத்தவர் சான்றிதழ் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் ஆகியவற்றில் எதை வழங்குவது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. அதிகாரிகள் எடுக்கும் முடிவுப்படி சான்றிதழ் வழங்கப்படுகிறது. சாதிகள் குறித்த அறிவிப்பாணையில் குரும்பர் என்ற பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அந்த பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது. குரும்பர் சாதியை பட்டியலினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு அட்வகேட் ஜெனரல் கொண்டு சென்று சாதிப் பெயரை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குரும்பர் என்ற பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே குரும்பர் என்ற பெயரில் சான்றிதழ் பெற்று அதன் மூலம் பழங்குடியினர் என்று உரிமை கோருவதை ஏற்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். .இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஆர்.டி.ஓ.,வின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தகுதி அடிப்படையில், நான்கு வாரங்களுக்குள், புதிய உத்தரவை, ஆர்.டி.ஓ.,பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக