ஆசிரியர் காலி பணியிடம் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் ஏறத்தாழ 15,000 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இதேபோல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு சென்ற ஜூலை மாதம் போட்டித்தேர்வு நடந்தது. இந்த காலியிடங்கள் அனைத்தும் 2012-2013-ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ஆகும். தேர்வுப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. வழக்குகள் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவின் அடுத்த பணிகள் தாமதமாகி வருகின்றன
பணியிடங்கள் விவரம் வருமாறு,
பள்ளிக்கல்வித்துறையில்
PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET. -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37
தொடக்கக் கல்வித்துறையில்
இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37
மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
நேரடி நியமனங்கள் தவிர பள்ளிக்கல்வித்துறையில் பதவி உயர்வு மூலமாக 981 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 230 தமிழாசிரியர் பணியிடங்களையும், 471பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 14 ஓவிய ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், தொடக்கக்கல்வி த்துறையில், பதவி உயர்வு மூலமாக 314 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், 380 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.
நேரடி நியமனப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக