ஞாயிறு, 15 ஜூன், 2014

வி.ஏ.ஓ., (கிராம நிர்வாகஅலுவலர்) தேர்வ :ஒரு வாரத்திற்குள் 'கீஆன்சர்'

நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாகஅலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர்,
'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10லட்சம் பேர் பதிவு செய்தபோதும், 7.63
லட்சம் பேர் மட்டுமே,தேர்வை எழுதினர். வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ.,
பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி.,நேற்று போட்டித் தேர்வை நடத்தியது. இதற்கு, 10
லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று, 3,000த்திற்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில்,தேர்வு நடந்தது. சென்னையில், தேர்வெழுதியவர்கள், தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மாநிலஅளவில், எந்த பிரச்னையும் இல்லாமல், காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, தேர்வு நடந்து முடிந்தது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்,ஷோபனா கூறியதாவது: தேர்வை, 7.63 லட்சம் பேர் எழுதினர். 2.45 லட்சம் பேர், தேர்வுக்கு வரவில்லை.
'கீஆன்சர்' ஒரு வாரத்திற்குள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவை,விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஷோபனா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக