ஞாயிறு, 15 ஜூன், 2014

15ம் தேதி (இன்று), காலை, 10:00 மணிக்கு பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியிடப்படும்.

15ம் தேதி (இன்று), காலை, 10:00 மணிக்கு பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியிடப்படும்.
''பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில்மாற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு, stutent.hse14trv.in என்ற இணையதளத்தில், 15ம் தேதி (இன்று), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின்பதிவு எண்கள் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்படும். பட்டியலில் இடம்பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாளில், மதிப்பெண் மாற்றம் எதுவும் இல்லை என, தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், நாளை, 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பழைய
மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, தேவராஜன்தெரிவித்து உள்ளார்.
மொத்தத்தில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது, 0.05 சதவீதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக