ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்தநிமிஷமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மூத்தவழக்குரைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும் மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்தநிமிஷமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளது எனவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவால், சிறைத் தண்டனையான நான்கு ஆண்டுகளும், அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என பல்வேறு தரப்பினரும்கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு மட்டுமே இறுதியானது அல்ல. இதற்கு மேல் இரண்டு மேல்
முறையீடுகள் உள்ளன.

இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறியது: முதல்வருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை அனைவரும் ஒரு பக்கமாகவே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. இந்தத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் முதல்வர்உள்பட நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.
அந்த மேல் முறையீட்டை விசாரணை செய்து, சிறப்பு நீதிமன்றத்தின்உத்தரவுக்குத் தடை விதித்து உடனடியாக ஜாமீன் வழங்கவும் வாய்ப்பு உள்ளது. உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது நாடு முழுவதும் நிலுவையில் உள்ளவழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடித்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம், முதல்வர் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டு வழக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சம்ஆறு மாதங்களுக்குள் முடித்து வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேல்முறையீடுகளில் முதல்வருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டால்,அடுத்த நிமிஷமே முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர முடியும். அதனால், இந்தத் தீர்ப்பை இறுதியாக நினைத்து 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கூறுவது மிகவும் தவறானது என்றார் அவர்.
இது தொடர்பாக மற்றொரு மூத்த வழக்குரைஞர் கூறியது: கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், நீதிக்கும் விடுமுறை வழங்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், வழக்கின் தன்மை, அதன் முக்கியத்துவம்குறித்து எடுத்துரைத்து சிறப்பு அனுமதி பெற முடியும். அவ்வாறு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று உடனடியாக மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு நீதிமன்றத்தைப்
பொருத்து முதல்வருக்கு ஜாமீன் கிடைப்பது அமையும். அதனால்,சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக