வெள்ளி, 26 செப்டம்பர், 2014

தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் : பதவி உயர்வு பட்டியலிலுள்ள ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உருவாகியுள்ள முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலிலுள்ள ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் 100 பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் உட்பட 10 முதுகலை ஆசிரியர் புதிய பணியிடம் உருவாகியுள்ளது. பதவி உயர்வு பட்டியல் ஆசிரியர்கள் கூறுகையில், "அனைத்து பாடத்திலும் 2,500க்கும் மேற்பட்டோர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேரை தரம் உயர்வு பள்ளி காலியிடத்தில் நியமிக்க விதிமுறை உள்ளது. மாணவர்கள் பாதிக்காத வகையில் சீனியாரிட்டி அடிப்படையில்நியமிக்க வேண்டும். முதுகலை ஆசிரியருக்கான டி.ஆர்.பி., தேர்வு நடத்தி நியமிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை யோசித்தால் இக் கல்வியாண்டு முடிந்து விடும். காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக