6.4 ஈர்ஒற்று மயக்கம் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர். எடுத்துக்காட்டு: புகழ்ச்சி இதில் 'ழ்' என்னும் மெய் எழுத்துக்குப் பின் 'ச்' என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த 'ச்' என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது. ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்: ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும். • 'ய்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல் நாய்க்கால் | - க் | வேய்ங்குழல் | - ங் | காய்ச்சல் | - ச் | மெய்ஞ்ஞானம் | - ஞ் | மேய்த்தல் | - த் | பாய்ந்தது | - ந் | வாய்ப்பு | - ப் | செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்) |
• 'ர்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல் பார்க்கிறாள் | - க் | ஆர்ங்கோடு | - (ஆத்திமரக்கிளை) - ங் | உயர்ச்சி | - ச் | ஞ் | - வழக்கத்தில் இல்லை. | பார்த்தல் | - த் | ஊர்ந்து | - ந் | தீர்ப்பு | - ப் | ம் | - வழக்கத்தில் இல்லை. |
• 'ழ்' என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல் வாழ்க்கை | - க் | பாழ்ங்கிணறு | - ங் | வீழ்ச்சி | - ச் | ஞ் | - வழக்கத்தில் இல்லை | வாழ்த்து | - த் | வாழ்ந்து | - ந் | தாழ்ப்பாள் | - ப் | ம் | - வழக்கத்தில் இல்லை. |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக