ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது'

'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது' என ஆந்திரகல்வி குழுவினர் தெரிவித்தனர்.கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், கல்வி மேம்பாடு அடைந்தமாநிலங்களின் செயல்பாடுகளை அறிந்து வர, ஆந்திர அரசு திட்டமிட்டது. அதன் முதல்முயற்சியாக, ஆறு பேர் கொண்ட குழு, தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளது.
சென்னையின் கல்வி நிலையங்களை ஆய்வு செய்து வந்த ஆந்திர மாநில குழுவில், மாநில உயர்கல்வி துறை செயலர், ஆர்.எம்.டாப்ரியல், உயர் கல்வி கவுன்சில் துணை தலைவர்விஜயபிரகாஷ், ஜே.என்.டி.யூ., பதிவாளர் ஹேமச்சந்திர ரெட்டி, ஈ.சி.ஈ.டி., கன்வீனர் சாய் பாபு, உயர்கல்வி துறை வழிகாட்டி அதிகாரி டேவிட் குமார் சுவாமி, தொழில்நுட்ப கல்வி துணை இயக்குனர் ஸ்ரீகாந்த்ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அந்த குழுவினர், கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், ராணி மேரி கல்லுாரி,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, அண்ணா பல்கலை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறியதாவது:தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்ய, சென்னை வந்தோம். தமிழகத்தில்,பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அண்ணா பல்கலையின் நிர்வாகம் சிறந்த முறையில்
நடக்கிறது. ரேண்டம் முறை, ஆராய்ச்சி படிப்புகள், கண்டு பிடிப்புகள் சிறப்பாக உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் செயல்பாடுகளை பற்றியும் அறிந்து உள்ளோம். அதை எங்கள்மாநிலத்தில் எடுத்து கூற உள்ளோம். உயர்கல்வி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் மென் திறன் பயிற்சி,அரசு கல்லுரிகளில் வழங்கப்படும் உதவி தொகை, மடிக்கணினி திட்டங்கள் குறித்தும் ஆந்திர அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளோம்.அதை தொடர்ந்து, கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும்,
ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக