TET தேர்வுக்கு விலக்களித்து சாண்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்
1.அரசின் அப்பில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. (the appeals are allowed)
2..ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், ( பணிநியமனம் வழங்க இயலாது ) டிவிஷன் பெஞ்சும் பிறப்பித்த ( பணிநியமனம் வழங்கவேண்டும்) தீர்ப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.(The orders passed by the High Court in writ appeals, writ petitions and in the review petitions are set aside)
கீழ்கண்ட 5 அம்சங்களை பரிசீலிக்க மீண்டும் விசாரிக்க வேண்டும்.
1 . TRB பணி நியமன விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதா?((i) the advertisement mentioned specific number of posts)
2 . அவ்வாறு குறிப்பிடப்பட்ட பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டதா?
( (ii) whether the posts mentioned have already been filled up)
3. தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? (whether the procedure of merit has been appositely followed)
4 . கலந்து கொண்டவர்களில் தகுதி பெற்றவர்கள் விடுபட்டும் தகுதி குறைவானவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?(iv) whether therespondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been
appointed)
5. விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை எனும் காரணத்துக்காக மனுதாரர்கள் தற்போதும் பணி நியமன உரிமை கோரும் தகுதி உடையவர்களா?( (v)whether assuming the advertisementdid not mention the number of posts, the respondents still could claim a rightin to havethe appointment)
என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
(the two writ petitions are remitted to the High Court with the stipulation that the matter shall be adjudicated by a Division Bench in the backdrop of issues formulated by us so that the controversy is put to rest at the High Court level.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக