முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு நேற்று திங்கள்கிழமை 30தேதி விசாரணை செய்யப்பட்டது. வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.
அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
வழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.
இதன் இறுதி உத்தரவு ( அக் 1) பிறப்பிக்கப்படும்
இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தீர்ப்பின் முழுவிவரம் மாலையில்தான் தெரியவரும் .மாலைக்குள் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து பட்டதாரிகளும் நீதிமன்றத்தின் உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக