ஐகோர்ட்டில் அளித்த
உறுதிமொழியை மீறி,
துணை
வட்டார
வளர்ச்சி அலுவலர் பதவி
உயர்வு
பட்டியலில், புறக்கணித்ததாக தாக்கலான வழக்கில், தேனி
மாவட்ட
கலெக்டருக்கு, 20 ஆயிரம்
ரூபாய்
அபராதம் விதித்து, மதுரை
ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
சின்னமனூர் பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த
மனு:
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில், வாட்ச்மேனாக, 1981ல்,
பணியில் சேர்ந்தேன். தற்போது, போடி
ஒன்றிய
அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிகிறேன். என்னை
வாட்ச்மேனாக பதவியிறக்கம் செய்து,
சம்பளத்தை திரும்பப் பெற,
2007ல்,
கலெக்டர் உத்தரவிட்டார். இதை
எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு
செய்தேன். கலெக்டர் உத்தரவை ரத்து
செய்து,
2008 பிப்.,
20ல்,
ஐகோர்ட் உத்தரவிட்டது. பணியாளர்கள் வேலுச்சாமி உட்பட,
மூன்று
பேர்
மனு
செய்தனர். கோர்ட்
உத்தரவின்படி, அவர்களுக்கு தேர்வுநிலை பதவி
உயர்வு
வழங்கப்பட்டது. 2007-08க்கான, விரிவாக்க அலுவலர் பதவி
உயர்வு
பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். எனக்கு
தகுதிகள் இருந்தும், என்
பெயர்
பட்டியலில் இல்லை.
என்
பெயரை,
சேர்க்க கோரி,
மீண்டும் மனு
செய்தேன். கலெக்டர், "பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களின் பட்டியலில் இருந்து, மனுதாரர் பெயர்
நீக்கப்படும்' என்றார். இதை
பதிவு
செய்த
ஐகோர்ட், வழக்கை
பைசல்
செய்தது. துணை
வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் பதவி
உயர்வு
பட்டியலில் 2007-08, பெயர் சேர்க்க வலியுறுத்தி, ஏப்.,
24ல்,
கலெக்டரிடம் மனு
அளித்தேன்; நடவடிக்கை இல்லை.
மே
8ல்,
துணை
வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் பதவி
உயர்வு
பட்டியல் 2013-14, வெளியானது. என்னைவிட, பணி
மூப்பில் இளையவர்களின் பெயர்கள் உள்ளன.
என்
பெயர்
இல்லை.
தனி
நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ததாகக் கூறி,
பதவி
உயர்வு
மறுக்கப்படுகிறது. துணை
வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் பதவி
உயர்வு
பட்டியலில் 2007 -08, என் பெயரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என,
குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.விஸ்வலிங்கம் ஆஜரானார். கலெக்டர் பழனிச்சாமி, "தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்துள்ளோம். மனுதாரருக்கு சம்பள
உயர்வு
நிறுத்தப்பட்டுள்ளது' என,
பதில்
மனு
தாக்கல் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக