"அறிவியல், கணித பாடங்களை ஊக்குவிப்பது போல்,
வணிகவியல் பாடத்தையும் ஊக்குவிக்க வேண்டும்,'' என,
ஆடிட்டர் சேகர்
பேசினார்.
"ஸ்ரீ குரு கிருபாஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட்' சார்பில், வணிகவியல் துறையில், சிறப்பாக பணியாற்றி வரும்,
பள்ளி
ஆசிரியர்களுக்கு, விருது
வழங்கும் விழா,
சென்னையில், நேற்று
நடந்தது. இதில்,
ஐ.சி.ஏ.ஐ.,
அமைப்பின் மத்திய
குழு
உறுப்பினரும், "ஸ்ரீ குரு
கிருபாஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட்' நிறுவனருமான சேகர்
பேசியதாவது: எந்த
நிறுவனமாக இருந்தாலும், வணிகவியல் இல்லாமல் நடத்த
முடியாது. அதிக
சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பு கொண்டதாக, வணிகவியல் பாடம்
திகழ்கிறது. கல்வி
நிறுவனங்கள், அறிவியல், கணிதம்
பாடங்களை ஊக்குவிக்க, பிளஸ்
2 படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய
அளவில்,
போட்டி
தேர்வுகளை நடத்தி
வருகின்றன. வணிகவியல் பாடத்தை ஊக்குவிக்க, எங்கள்
நிறுவனத்தின் சார்பில், போட்டி
தேர்வு,
டிச.,
28ம்
தேதி
நடக்கிறது. இதில்,
முதல்
பரிசு,
50 ஆயிரம்;
இரண்டாவது பரிசு,
30 ஆயிரம்
ரூபாய்;
மூன்றாவது பரிசு,
20 ஆயிரம்
ரூபாய்
வழங்கப்பட உள்ளது.
சிறந்த,
100 மாணவர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர்
பேசினார்.
தமிழக
அரசின்
திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின், முதன்மை செயலர்
கிருஷ்ணன் பேசியதாவது: ஒவ்வொருவரும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல,
ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர். இந்தியாவில், சேமிப்பு பழக்கம் சிறப்பாக உள்ளது.
ஆசிரியர்கள், நிதி
தொடர்பான படிப்புகளில், தரம்
குறையாமல் கட்டுப்பாடுடன் நடத்தி
வருகின்றனர். ஒரு
சிறிய
நாட்டின், பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், அதன்
தாக்கம் உலகம்
முழுவதும் எதிரொலிக்கிறது. எனவே,
பொதுமக்கள், நிதி
துறையில் முதலீடு செய்யும் போது,
ஏமாறாமல் இருக்க,
அதை
பற்றிய
அறிவை
வளர்த்து கொள்ள
வேண்டும். இவ்வாறு, அவர்
பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக