மத்திய அரசின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நாட்டில் 12 கோடி மாணவர்கள் பயனடைகின்றனர் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
ஆம்பூர் ஷ்ரீ வித்ய விஹார் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 189 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜி.கே. வாசன் பேசியதாவது:-
தமிழகம் கல்வியில் முன்னனி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் கணினி துறையில் வெளி நாடுகளில் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். வெளிநாட்டவர்களுக்கு சவாலாக இந்தியர்கள் திகழ்கின்றனர். இந்தியாவின் தலைவிதி வகுப்புறைகளில் நிர்ணயிக்கப்படுவதாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறியது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் சிறந்த பண்புகளை வெளி கொணர்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே ஆசிரியர்ளாக பட்டம் பெறும் நீங்கள் நல்ல சமுதாயத்திற்கு தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும்.
மத்திய அரசு கல்வி வளர்ச்சிக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு 2013-14-ம் ஆண்டில் கல்வித்துறைக்கு ரூ.65,867 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை காட்டிலும் இது 10 மடங்கு கூடுதலாகும். எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு 2012-13 ஆம் ஆண்டில் ரூ.25,555 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டிற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6 சதவீதம் கூடுதலாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் கல்வித்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 11-வது ஐந்தாண்டு திட்டமான 2007-2012-ம் ஆண்டுகளில் ரூ,2,69,873 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 55 ஆண்டுகளை காட்டிலும் 18 ஆயிரம் மடங்கு கூடுதலாகும்.
மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு 2013-14 ஆம் ஆண்டிற்கு ரூ.13,215 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 12 கோடி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். உயற்கல்விக்காக ரூ.16,210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 17 மத்திய பல்கலைக் கழகங்கள் இருந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டனி ஆட்சியில் தற்போது 44 மத்திய பல்கலைக் கழகங்களாக உயர்ந்துள்ளது எனக் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக