சனி, 16 நவம்பர், 2013

டிச., 26 ல் திருச்சியில் சிறப்பு அறிவியல் முகாம்: பிளஸ் 1 மாணவர் விண்ணப்பிக்கலாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலை நுண்ணுயிரியல் துறை சார்பில், டிச., 26 முதல் 30 வரை நடக்கும் சிறப்பு அறிவியல் முகாமில் பங்கேற்க, பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இம்முகாமை மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை இணைந்து நடத்துகிறது. மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்க, பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி மற்றும் நானோ தொழில் நுட்பத் துறைகள் குறித்த சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.இதில் பங்கேற்க, பத்தாம் வகுப்பு தேர்வில், 94.2 சதவிகித்திற்கு மேல் மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். தங்கும் வசதி, <உணவு, போக்குவரத்து செலவு இலவசம். டிச., 10, விண்ணப்பிக்க கடைசி நாள். விண்ணப்பங்களை www.bdu.ac.in/inspire என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன், 0431- 2407 082 "எக்ஸ்டன்ஷன்' "439' என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக