தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக 1093 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. எனவே அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின்சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 28–ந் தேதி தகுதி அடிப்படையில், கடந்த ஆகஸ்டு மாதம் 12–ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் பணி சென்னையில் கடந்த 25–ந்தேதி முதல் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்லூரி, அரசு காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் ஆண்கள் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு படிப்பிற்கும் ஒவ்வொரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. உதாரணமாக பிஎச்.டி. படித்திருந்தால் 9 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதுபோல எம்.பில்.படித்திருந்தால் 1 மதிப்பெண் உண்டு.
தபால் வழியில் படித்திருந்தால் மதிப்பெண் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் தபால் வழியில் படித்திருந்தாலும் காயிதே மில்லத் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடந்தவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்லூரியில் சான்றிதழ் பார்த்தவர்களில் தபால் வழியில் படித்தவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் இப்படி குளறுபடியாக சான்றிதழ் சரிபார்க்கலாமா? எல்லோரும் சமம் என்று முன்கூட்டியே அறிவுரை கூறியிருக்கவேண்டும். எனவே மீண்டும் சான்றிதழ் சரிபார்த்து சரியான மதிப்பெண் வழங்கவேண்டும். என்றனர்
News source தினத்தந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக