"அடுத்த இரு ஐந்தாண்டு திட்டங்களில், மத்திய
அரசு
உயர்கல்விக்கென, 50 ஆயிரம்
கோடி
ரூபாய்
ஒதுக்கீடு செய்ய
உள்ளது,''
என,
பல்கலை
மானியக் குழு
துணைத்
தலைவர்,
தேவராஜ் தெரிவித்தார்.
கோவையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், அவர்
பேசியதாவது: எவ்வளவு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தரமான
கல்வி
போதிக்க ஆசிரியர்கள் அவசியம். இதை
மனதில்
வைத்து,
ஆசிரியர்களின் தரத்தை
மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல்கலை
ஒன்றை,
ஆந்திர
மாநிலம் காக்கிநாடாவில், பல்கலை
மானியக் குழு
உருவாக்கியுள்ளது. அடுத்த,
2 ஐந்தாண்டு திட்டங்களில், உயர்கல்வியை மேம்படுத்த, மத்திய
அரசு,
50 ஆயிரம்
கோடி
ரூபாய்
ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதில்,
25 ஆயிரம்
கோடி
ரூபாய்,
சிறப்பாக செயல்படும் தனியார் கல்வி
நிறுவனங்களில், தொழில்
சார்ந்த கல்வி
அளிக்கவும், பாடங்களை உருவாக்கவும் வழங்கப்படும். மீதமுள்ள, 25 ஆயிரம்
கோடி
ரூபாய்,
பல்கலை
மானியக் குழுவுக்கு, உயர்கல்வி மேம்பாட்டுக்கு செலவிட
வழங்கப்படும். இந்திய
கலாசார
மேம்பாட்டுக்கும், சிறந்த
ஆசிரியர்களை உருவாக்கவும், இந்த
நிதி
பயன்படும். அடுத்த,
10 ஆண்டுகளில், இந்த
நிதி
செல்விடப்படும். இவ்வாறு, தேவராஜ் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக