கூட்டுறவு வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை.இப்பணியிடங்களுக்கு கடந்த டிச., 9ல் மாநில அளவில் எழுத்துத் தேர்வு நடந்தது. பத்து நாட்களில் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. டிச., கடைசியில் சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்வு நடந்தபோது, மழை பெய்ததால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் நேர்முகத் தேர்வு நடத்தினர். 3,600 பணியிடங்களுக்கு ஒருபணியிடத்துக்கு இருவர்வீதம், முதலில் 7,200 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடைசியாக 3,600 பேர் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணியாணை வழங்குவதற்குள், சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்., 9ல் வழக்கு தொடர்ந்த பின், தற்போது வரை, அதற்கான மறு உத்தரவு அரசிடமிருந்து வரவில்லை. இதனால் முறைப்படி தேர்வெழுதி வெற்றி பெற்றோர், வேலை கிடைக்குமா என்ற அச்சஉணர்வில் உள்ளனர்.
நேர்முகத்தேர்வில் பங்கேற்றோர் கூறுகையில், "பணிக்காக விண்ணப்பிக்கும் போதே, ஏதேதோ காரணங்களை காட்டி, பணி நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அரசு இந்தவிஷயத்தில் உடனடியாக தலையிட்டு, கோர்ட் தடையை விலக்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால், வெற்றி பெற்றவர்களின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக