திங்கள், 25 நவம்பர், 2013

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம்:

தமிழகத்தில் உள்ள 7 ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன.தமிழக தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோ ஜாக்), சென்னையில் நடந்தது. அதில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து கூட்டு
நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்தி உள்ளனர். கூட்டத்தில், மத்திய அரசின், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்திற்கு இணையாக, தமிழகத்திலும் ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். தகுதி தேர்வை கைவிட்டு, சீனியாரிட்டி முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக, டிச., 4ல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகள் குறித்து முதல்வர், தொடக்க கல்வி இயக்குநர், கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக