'ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), சர்ச்சைக்குரிய விடைகள்
மற்றும் கேள்விகள் குறித்து, ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர்
குழு அமைக்கப்படும்' என, டி.இ.டி., தேர்வர்களிடம், ஆசிரியர் தேர்வு வாரிய
(டி.ஆர்.பி.,) தலைவர், விபு நய்யார், உறுதி அளித்தார்.டி.இ.டி., தேர்வில்,
சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு
மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர்.
இது
குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர்.நேற்று,
100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள,
டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில், அனைவரும்,
அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித் தனர். பின், தேர்வர்கள் சார்பில், இருவர்
மட்டும், டி.ஆர்.பி., தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, இரு
தேர்வர், டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்தனர். இந்த சந்திப்பு
குறித்து, தேர்வர்கள் கூறியதாவது:தேர்வை நடத்துவதும், தேர்வு முடிவை
வெளியிடுவதும் தான், டி.ஆர்.பி.,யின் வேலை. கேள்வித்தாளை வடிவமைப்பது,
விடைகளை தயார் செய்வது, டி.ஆர்.பி., வேலை அல்ல. அனுபவம் வாய்ந்த பாட
ஆசிரியர் குழு தான், இவற்றை செய்கிறது.
news by DINAMALAR REPORTER
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக