தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய
குரூப்-4 தேர்வு முடிவு வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத் தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதியுள்ளனர்.
தற்போது தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்.நடந்து முடிந்த குரூப்-1 மெயின்தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.
பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக