மொகரம் விடுமுறை தேதி மாற்றப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.முஸ்லிம்
காலண்டர் அடிப்படையில், மொகரம் மாதத்தின் முதல் நாளை, முஸ்லிம்கள்
புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மொகரம் பண்டிகைக்கு, அரசு
விடுமுறை விடப்படும்.இம்மாதம் 14ம் தேதி, மொகரம் பண்டிகையையொட்டி, அரசு
விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், முஸ்லிம் காலண்டர்
அடிப்படையில், மொகரம் பண்டிகை, இம்மாதம் 15ம் தேதி வருவதால், அன்று
விடுமுறை அறிவிக்க வேண்டும் என, முஸ்லிம்கள், அரசுக்கு கோரிக்கை
விடுத்தனர்.அதை ஏற்று, இம்மாதம் 14ம் தேதிக்கு பதில், 15ம் தேதி, அரசு
விடுமுறை நாளாக அறிவிப்பதாக, அரசு றிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக