தமிழகத்தில் புதிதாக ஒன்பது தொழிற்பயிற்சி நிலையங்களை
(ஐ.டி.ஐ.) முதல்வர்
ஜெயலலிதா திங்கள்கிழமை
தொடங்கி வைத்தார்.
மேலும், தொழிற்பயிற்சி
நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல் மற்றும்
கருவிகள் கொள்முதல்
செய்யவும் அவர்
நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நலனுக்காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையங்களில் பெரும்பாலும் ஏழை, எளிய மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணவர்களின் விருப்பத்தினை நிறைவு செய்யும் வகையிலும், பல்வேறு காரணங்களால் உயர்கல்வியைத் தொடர இயலாத மாணவர்கள் தொழிற் பயிற்சி பெற்று அதன் மூலம் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள துணை செய்யவும் இத்தகைய தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட வேண்டியது அவசியாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்பட 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் நடப்பாண்டில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அவற்றில் ஒன்பது பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, தேனி மாவட்டம் போடி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை ஆகிய 5 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆகிய 4 இடங்களில் பழங்குடி இனத்தவருக்கென புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் ஒன்பது அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பயிற்சி நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்காக பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.24.50 கோடியும், பிற தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.26.39 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடப் பிரிவுகளில் பயிற்சி: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ஒவ்வொன்றும் தலா ஐந்து தொழிற்பயிற்சிகள் வழங்கும் வகையிலும், தலா 200 மாணவர்கள் பயிற்சி பெறும் வசதிகளைக் கொண்டதாகவும் செயல்படும். மெரைன் என்ஜின் பிட்டர், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், வயர்மேன், பேஷன் டெக்னாலஜி, மோட்டார் வாகன மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரிஷியன், பிளம்பர், டர்னர், டைலரிங், லிப்ட் மெக்கானிக் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.டி.பச்சைமால், ந.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக