சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப்
பணியாளர்களைத் தமிழக அரசு நீக்கியது சரி என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த
தீர்ப்பை ரத்து செய்து அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மக்கள் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரை, தமிழக அரசு பணிக்குத் தேவையில்லை என்று கூறி 2011-ஆம் ஆண்டு நீக்கியது. அதை எதிர்த்து பணியாளர் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
அதை விசாரித்த நீதிமன்றம், "மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஐந்து மாத சம்பளத்தை வழங்கி அவர்களைப் பணியில் இருந்து தமிழக அரசு விடுவிக்கலாம்' என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த நடவடிக்கையை மக்கள் நலப் பணியாளர் நலச் சங்கத்தில் இடம்பெற்ற பெரும்பான்மை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எதிர்த்தனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் ஆகியவை சார்பில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந் நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஆர். தவே, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் நல பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அந்தியாருஜினா, "1989-ஆம் ஆண்டு முதல் மக்கள் பணியாளர்கள் அரசால் நியமிக்கப்பட்டு பணி செய்தனர். ஆனால், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சியில் அவர்கள் நியமிக்கப்படுவதும், அதிமுக அரசில் அவர்கள் நீக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்படும் பணியாளர்களின் நலன்களை ஆராயத் தவறிவிட்டது. பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஐந்து மாத சம்பளத்தை வழங்கி விடுவிப்பதால் பாதிக்கப்படும் அவர்களின் எதிர்காலம் குறித்து உயர் நீதிமன்றம் ஆராயவில்லை' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, "மக்கள் நலப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்கள் தாற்காலிகமாக நான்கு ஆண்டுகளுக்கும், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கும் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களின் பணிக் காலம் முடிவடைந்ததால்தான் நீக்கம் செய்யப்பட்டனர். அதுவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பணியில் இருந்து விடுவிக்கப்படும் பணியாளர்களுக்கு ஐந்து மாத சம்பளம் வழங்கிய பிறகே அனைவரும் விலக்கிக் கொள்ளப்பட்டனர்' என்றார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
"இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. பணியாளர்கள் நியமன ரத்து நடவடிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. எனவே, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் சங்கங்கள் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர வேண்டும். அதை ஆறு மாதங்களுக்குள் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்புகளின்றி விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக