ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை எழுத்துத் தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், "டிகிரி படித்தவர்கள் பதிலளிக்கும் வகையில் தான் பெரும்பாலான கேள்விகள் இருந்தன. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் 50 மார்க் எடுக்கலாம்" என்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 360 பேரை தேர்வு செய்வற்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நேற்று நடந்து. தேர்வுக்கு 3 ஆயிரத்து 730 பேர் விண்ணப்பித்தனர். 3 ஆயிரத்து 418 பேர் தேர்வெழுதினர். சென்னை தலைமையிட டி.ஐ.ஜி., நாகராஜன் தலைமையில் போலீசார் மையங்களை ஆய்வு செய்தனர்.
வினாத்தாளில் கேட்டிருந்த முதல் 5 கேள்விகளுக்கு அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் பதிலளிக்க முடிந்தது. கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பொது அறிவு, கேள்விகள் இடை, இடையே கேட்கப்பட்டிருந்தன. 86 முதல் 100 வரை கோடிட்ட இடம் நிரப்பு, வார்த்தைகளுக்கு பொருள் கேட்டு ஆங்கில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
ஆடதி பொருள் தருக என 63வது கேள்வியாக கேட்கப்பட்டு ஆறு, அருவி, கடல், மலை என, 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதற்கு சரியான பதில் தெரியாமல் ஏராளமானோர் திணறினர். தேர்வு எழுதியவர்கள் கூறுகையில்," டிகிரி படித்தவர்கள் பதிலளிக்கும் வகையில் தான் பெரும்பாலான கேள்விகள் இருந்தன. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் 50 மார்க் எடுக்கலாம்" என்றனர்.
தேனி: சிறப்பு காவல் இளைஞர் படை தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், அதிக மார்க் கிடைக்கும் வகையில் தேர்வுகளை எழுதி உள்ளதாகவும் தேர்வு எழுதிய இளைஞர்கள் கூறியுள்ளனர்.
தேனி மாவட்டத்திற்கு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 110 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு நேற்று தேனியில் ஐந்து மையங்களில் நடந்தது. மொத்தம் 3,694 பேர் தேர்வு எழுத அனுமதி கடிதம் பெற்று இருந்தனர். ஆனால் நேற்று 485 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். 3,202 பேர் மட்டுமே அனுமதி பெற்று இருந்தனர். ஐ.ஜி., சுந்தரமூர்த்தி, எஸ்.பி., மகேஷ் ஆகியோர் தேர்வு மையங்களை நேரடியாக ஆய்வு செய்தனர்.
வினாக்கள் குறித்து தேர்வு எழுதியவர்கள் கருத்து:
*அருண்குமார், அப்பிபட்டி: தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. கணிதம், அறிவியல், பொது அறிவு, சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, மனோதத்துவம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கேள்விகள் இடம் பெற்று இருந்தன. ஆனால் அனைத்து பாடங்களிலுமே கேள்விகள் எளிமையாக இருந்தன. எளிய முறையில் பதிலளிக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் போது தெளிவாக படித்தவர்கள், தேர்வுக்கு தனியாக தயாராக விட்டால் கூட இந்த எழுத்து தேர்வில் எளிதில் வெற்றி பெற்று விட முடியும்.
கவுதம், அப்பிபட்டி: கணக்கு பாடத்தில் மிகவும் எளிமையான கேள்விகளே இடம் பெற்று இருந்தன. ஆங்கிலத்தில் இலக்கணம் பாடத்திலும் அதேபோல் எளிய முறையிலான கேள்விகள். போலீஸ் தேர்வுக்கு படிக்காமல் பொது அறிவு திறன் உள்ள யாராக இருந்தாலும் இந்த தேர்வில் எளிதில் வெற்றி பெற்று விட முடியும். குறிப்பாக தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த தேர்வில் மிக எளிய முறையில் வென்று விட முடியும். அவ்வளவு எளிய கேள்விகளாக இருந்தன.
கே.பரமேஸ்வரன், எல்லப்பட்டி: பள்ளியில் பாடங்களை முறையாக படித்தவர்கள் இந்த எழுத்து தேர்வில் 90 மார்க் பெறுவது உறுதி. பொது அறிவு, கணக்கு, அறிவியல் என எல்லா பகுதிகளும் பாடத்தில் இருந்த கேள்விகளே இடம் பெற்று இருந்தன. கூடுதல் முயற்சி செய்து படித்த மாணவர்களுக்கு இந்த தேர்வு ஜாக்பாட் தான். எனவே அடுத்த உடற்தகுதி தேர்வு உட்பட மற்ற தேர்வுகளிலும் போட்டிகள் அதிகம் இருக்கும். நானும் அதிக மார்க் வாங்கி விடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். எனவே அடுத்த போட்டிக்கு இப்போதே தயாராக வேண்டும்.
பிச்சைமணி, போடி: போலீஸ் தேர்வுக்கான கேள்விகளில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருந்தது. வாழ்வியல் பயன்பாடு, நடைமுறை பயன்பாடு, போக்குவரத்து நிகழ்வுகள் தொடர்பாக தினமும் வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளே அதிகம் இடம் பெற்று இருந்தன. எனவே நமக்கு பொது அறிவு அதிகம் இருந்து, சமூக நிகழ்வுகளை அதிகம் சந்திக்கும் பக்குவம் உள்ளவராக இருந்திருந்தால் இந்த தேர்வினை எளிதில் கையாண்டிருக்க முடியும். எனக்கும் அதிக மார்க் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
SOURCE DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக