பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் 4– வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.விழாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி பி.எட். மற்றும் எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி. உள்ளிட்ட பல படிப்புகளில் பதக்கம் பெற தேர்வு செய்த 87 பேர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.விழாவில் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினரும், மத்திய பாதுகாப்புத்துறையை சேர்ந்தவருமான பேராசிரியர் டி.என்.ரெட்டி பட்டமளிப்பு விழா உரையாற்றியதாவது:–
எந்தநாட்டிலும் பொருளாதார வளர்ச்சி தேவை என்றால் அந்த நாட்டில் கல்வி வளர்ச்சி பெற்றால் தான் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய முடியும். எனவேதான் இந்தியாவில் மத்திய அரசும் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதுபோல தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு அதிக அக்கறை எடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா எடுத்து செயல்படுத்தி வருகிறார். 12–வது ஐந்தாண்டு திட்டம் 12–வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக இந்தியா முழுவதும் 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களுக்கும் தலா ஆயிரம் கோடி முதல் 1,200 கோடி வரை கிடைக்கும்.கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. பாடத்தை மட்டும் ஆசிரியர்கள் நடத்தினால் போதாது.இவ்வாறு டி.என்.ரெட்டி பேசினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:– புதிய கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் அதிக பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 56 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி உள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 18 சதவீதமாக இருந்ததை 19 சதவீதமாக ஜெயலலிதா உயர்த்தி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சத்து 91 ஆயிரத்து 790 மாணவ– மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் பேசினார்
.தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் வரவேற்றார்.உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக