செவ்வாய், 17 டிசம்பர், 2013

சைக்கோமெட்ரிக் தேர்வுகள்


பெரும்பாலான சைக்கோமெட்ரிக் தேர்வுகள்மென்பொருள் புரோகிராம்களைப்
பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.இவற்றை ஆன்லைனிலேயேகூட எழுத முடியும். எனவே,மற்ற தேர்வுகளைவிட இவை விரைவாகவும்முடிந்து விடுகின்றன. தொடர் செலவுகளும் மிகக் குறைவு. மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில்வசிப்பவர்கள்கூட இருந்த
இடத்திலேயே தேர்வுகளை எழுத முடியும்.
மதிப்பீடுகளும் துல்லியமாக இருக்கும். சைக்கோமெட்ரிக் தேர்வுகளிலிருந்து கிடைக்கும் விவரங்களைக்கொண்டு தேர்வு எழுதுபவரின் மறைந்திருக்கும் ஆற்றல்கள் மற்றும் குணங்களைக்கண்டுபிடிக்க முடியும். ஒருவரின் சிந்தனை போக்கு, ஒரு சிறந்த குழுவின் அங்கமாக இருக்கக்கூடிய தகுதி, தலைமைப்பண்பு ஆகியவற்றைச் சைக்கோமெட்ரிக் தேர்வு களின் மூலம் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, ‘ஒரு அலுவலகத்தில் பல ஊழியர்களும் வேலை நேரத்தில் மொபைலில் (அலுவலகப்பணி அல்லாத) விஷயங்களைப் பேசுகிறார்கள். இதனால் நிர்வாகத்தின் வேலைத் திறன் குறைகிறது. ‘இனி ஊழியர்கள் நிறுவனத்துக்குள் மொபைல் தொலைபேசிகளைப் பயன்படுத்தக் கூடாது’’
என்று அறிவிக்க நிர்வாகம் நினைக்கிறது. இது உங்களைப் பொருத்தவரை சரியா, தவறா? இதற்குப் பதில் அளிப்பதன் மூலம் உங்களை நீங்கள் ஓரளவாவது வெளிப்படுத்திக் கொள்வீர்கள். இது போன்ற கோணங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்
அளிக்கப்படும்போது தேர்வு எழுதுபவரின் மனநிலையை மேலும் துல்லியமாகக் கணிக்க முடியும். எடுத்துக்காட்டாகக் கீழே உள்ளவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறலாம். 
அ) அலுவலகத்துக்கு வரும்போது ஒரு போதும் செல்போன் எடுத்துக்கொண்டுவரக் கூடாது.
 ஆ) ஊழியர்கள் தங்கள் செல்போன்களை வாசலில் உள்ள செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு,
வீடு திரும்பும்போது பெற்றுக் கொள்ளலாம். 
இ) செல்போனை அலுவலகத்துக்குள் கொண்டு வரலாம். ஆனால் குறுந்தகவல்களை அனுப்பமட்டுமே, அவற்றை அங்குப் பயன்படுத்த வேண்டும்.
 ஈ) மிகவும் அவசரம் எனும்போது மட்டும் செல்போனைப் பயன்படுத்தலாம். இவற்றில் 

உங்கள் தேர்வு எது என்பதை​ பொறுத்து உங்களை ஓரளவு கணிக்க முடியும் அல்லவா? உங்களை மேலும் துல்லியமாகக் கணிக்கக் கேள்விகளை விரிவு படுத்தலாம். அலுவலகத்துக்குள் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி அமலுக்கு வந்துவிட்டது.இந்த நிலையில் ரமேஷ் என்பவர் செல்போனை அலுவலகத்துக்குள்
பயன்படுத்துவதை அவருக்கு மேலதிகாரியான நீங்கள் பார்க்கிறீர்கள். கேட்டால்
‘ஊரிலிருந்து மாமா வந்திருக்கிறார். முக்கியமான விஷயங்களைப் பேசும்படி ஆனது. இன்னும்இரண்டு, மூன்று நாட்களுக்கு இப்படிப் பேசுவதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார். என்னசெய்வீர்கள்? 
(அ) ஒப்புக்கொள்ள மாட்டேன். 
(ஆ) அனுமதிப்பேன். தவிர்க்க முடியாதச் சந்தர்ப்பங்களில் அவர் இதுபோன்ற
சலுகையை எடுத்துக்கொள்ளலாம். 
(இ) இரண்டு, மூன்று நாட்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை அவருக்குக் கொடுப்பேன். இதற்கான பதிலின் மூலம் இன்னமும்கூட ஒருவரை பற்றி அறிந்து கொள்ள முடியும். 

கீழேயுள்ள அடுத்தடுத்த கேள்விகளின் மூலம் ஒருவரை மேலும் துல்லியமாகப் புரிந்து கொள்ள
முடியும். அந்த ரமேஷின் வயது 22 என்றால், உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்? அவரது வயது 53 என்றாலும்உங்கள் நடவடிக்கை அதுவாகவே இருக்குமா? ரமேஷுக்குப் பதிலாக அவர் ராகினி என்ற பெண் ஊழியராக இருந்தால், உங்கள்
நடவடிக்கை வேறுபட்டதாக இருக்குமா? அந்த ராகினி 22 வயதுள்ள இளம்பெண் என்றால் உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்? அல்லது அந்த ராகினி சற்றே முதியவர் என்பதுடன் உங்கள்அம்மாவை நினைவுபடுத்தும் ஜாடையில் இருந்தால், உங்கள் நடவடிக்கை மாறுபடுமா? செல்போனில் பேசும் ரமேஷ் உங்கள் பள்ளித் தோழனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த ரமேஷ் தொழிற்சங்கத்தில் வாய்ஸ் உள்ளவர் என்றால், உங்கள் நடவடிக்கையில் மாறுதல்இருக்குமா? 

ரமேஷை செல்போனில் பேச இரண்டு, மூன்று நாட்களுக்கு அனுமதிக்கிறீர்கள். ‘பாவம்,மாமா ஊரிலிருந்து வந்தால் பேசத்தானே வேண்டியிருக்கும்’. அதற்கு இரண்டு நாள்கழித்து வேறு ஒருவர் மொபைலைப் பயன்படுத்த, உங்கள் அனுமதியைக் கோருகிறார். காலையில் கிளம்பும்போது அவர் அப்பாவுக்குக் காய்ச்சல் வந்திருந்தது. அது பற்றி விசாரிக்கவேண்டுமாம். இப்போது உங்கள் நடவடிக்கை எப்படியிருக்கும்? இந்த விரிவான கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம், நிச்சயம் ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடியும். 

இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா சைக்கோமெட்ரிக் தேர்வுகளின்முக்கியத்துவத்தை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக