மாணவர்களிடையே சூழ்ந்துள்ள அறியாமை என்ற இருளை போக்கும் வெளிச்சமாக, கல்வி நிறுவனங்கள் விளங்க வேண்டும்,'' என, பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) உறுப்பினர் டி.என்.ரெட்டி கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக் கழகத்தின், நான்காவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்தது. கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் வரவேற்றார்.
பல்கலைக்கழக இணைவேந்தரும், அமைச்சருமான பழனியப்பன் முன்னிலை வகித்து பேசினார்.
மாணவ, மாணவியர், 87 பேருக்கு பதக்கம் உட்பட, மொத்தம், 69,282 பேருக்கு பட்டங்களை வழங்கி, யு.ஜி.சி., உறுப்பினரும், ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைவருமான டி.என்.ரெட்டி, பேசியதாவது: எந்த ஒரு நாடாக இருந்தாலும், கல்வியே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. உலகில், சீனாவுக்கு அடுத்தபடியான மனித வளத்தை, இந்தியா பெற்றுள்ளது. அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்களிடையே, சம்பந்தப்பட்ட துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் என்ன என்பது தெரியாத நிலை, குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்வதற்கான இடம் எது என்ற, இருவகை குழப்பங்கள் உள்ளன. மாணவர்களிடையே சூழ்ந்துள்ள அறியாமை என்ற இருளை போக்கும் வெளிச்சமாக, கல்வி நிறுவனங்கள் விளங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக