புதன், 18 டிசம்பர், 2013

  'கொற்கைக்கு'  2013ம் அண்டுக்கான சாகித் அகாடமி விருது


2013ம் அண்டுக்கான சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் கொற்கை நாவலுக்காக ஜோ.டி.குருஸ் இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை கிராமம்,மணப்பாட்டை சேர்ந்தவர்.ஜோ.டி.குருஸ் ஏற்கனவே ஆழி சூழ் உலகு என்ற நாவலை எழுதியுள்ளார்

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமம்,உவரியை சேர்ந்தவர் ஜோ டி குருஸ். தற்போது சென்னையில் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் தலைமை பொறுப்பில் உள்ளார். இவரது நாவல் கொற்கை முழுக்க கடல் வாழ் மக்களின் கதை சொல்கிறது.பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி) கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000
ஆண்டில் நிறைவு பெறுகிறது. கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறியிருக்கிறார் நாவலாசிரியர் குருஸ். இவர் ஏற்கனவே ஆழி சூழ் உலகு நாவலை படைத்துள்ளார். நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியிலும் ,தொடர்ந்து சென்னை லயொலா கல்லூரி எம்.ஏ.,பொருளாதாரம், திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பில்.,பயின்றவர். இவரது முந்தைய நாவல், ஆழி சூழ் உலகிற்கே இத்தகைய இலக்கிய கவுரவம் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டும் சாகித்ய அகாடமி விருது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் செல்வராஜ்க்கு அவரது தோல்
நாவலுக்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது குறித்து ஜோ டி குருஸ் கூறுகையில்,கடற்கரை சமுதாயத்திற்கு கிடைத்த
அங்கீகாரமாக கருதுகிறேன். இதன் மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை, நீர்தேவதையின் மக்கள் மீது படும் என நினைக்கிறேன்.சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்க்கவில்லை. பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் பிறந்த நெல்லை மண்ணில் பிறந்ததற்காகவும் எனக்கும் விருது கிடைத்தற்காகவும் மகிழ்கிறேன் என்றார். இவரது மனைவி சசிகலா, மகன் அந்தோணி டி குருஸ், மகள் ஹேமா டி குருஸ் சென்னையில் வசிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக