இந்தச் சங்கத்தின் சேலம் மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கொளத்தூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜி.இளங்கோ, பொருளாளர் எம்.மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பொதுச் செயலர் டி.கோவிந்தன் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு தனியாக அமைச்சுப் பணியாளர்களை நியமித்துக் கொண்டு, ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதினான்கு வகையான நலத் திட்டங்களை பள்ளிகளுக்கு வழங்கி ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தலைமை ஆசியர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை உள்ள அணைத்து காலிப் பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக