திங்கள், 16 டிசம்பர், 2013

தருமபுரி மாவட்ட பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு


ருமபுரி மாவட்ட பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்க மாணவர்கள் நலச் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தருமபுரி அருகே தொப்பூரில் மாணவர்கள் நலச் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் பி.சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

சிறப்புத் தலைவர்கள் ப.செங்குட்டுவன், பிரான்சிஸ் சேவியர், கெ ளரவத் தலைவர் கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், தற்போது பள்ளியில் நடைபெறும் அரையாண்டு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.500 மதிப்பிலான ஊக்கப் பரிசுகள் வழங்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 ஏழை மாணவர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசுகள் வழங்க வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, வி.சுரேஷ்குமார் வரவேற்றார். பொருளாளர் டி.செந்தில்முருகன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக