நமது
குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி அவர்கள் தான்
பங்கேற்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றும் பொழுதெல்லாம் உலகப்
பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல்
இருநூறு இடங்களில் ஒன்றைக்கூட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெற
முடியவில்லை என்று
ஆதங்கப்படுகிறார். இந்த
ஆதங்கம் முதல்
குடிமகனுக்கு மட்டுமல்ல, சராசரி
இந்தியனுக்கும் கூடத்தான்
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாநில
மற்றும் மத்திய
பல்கலைக்கழகங்கள் உட்பட
659 பட்டமளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களையும், 33,000 கல்லூரிகளையும், சுமார்
2.6 கோடி
மாணவர்
சேர்க்கையையும் உள்ளடக்கிய உலகின்
இரண்டாவது மிகப்
பெரிய
உயர்க்கல்வி அமைப்பைக் கொண்ட
நம்மால் முதல்
இருநூறு இடங்களில் ஓர்
இடத்தைக் கூட
பிடிக்க முடியவில்லையே என்ற
ஏக்கம்
கல்வியாளர்களிடமும், ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், குறிப்பாக பெற்றோர்களிடமும் இல்லாமல் இல்லை.
30 சதவீத மதிப்பெண் கற்பித்தலுக்கும், 30 சதவீத
மதிப்பெண் ஆராய்ச்சிக்கும், 30 சதவீத
மதிப்பெண் ஆராய்ச்சி சார்ந்த வெளியீடுகளுக்கும், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், மாணவர்
மற்றும் அதன்
ஆராய்ச்சி மீது
உலகளாவிய பார்வைக்கு 7.5 சதவீத
மதிப்பெண்ணும், புதுமைகளுக்கு 2.5 சதவீதம் என
100சதவீத
மதிப்பெண்களை அளவுகோலாக வைத்து,
ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் மேற்கண்ட பிரிவில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் பெற்ற
மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. 2013-14ம் ஆண்டுக்கான பட்டியலில் முதல்
பத்து
இடங்களில் 7 இடங்களை அமெரிக்க பல்கலைக்கழகங்களும், 3 இடங்களை இங்கிலாந்து பல்கலைக்கழகங்களும் பெற்றுள்ளன.
ஆசிய
பல்கலைக்கழகங்களில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழகம்
23வது
இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி.- டில்லி,
கான்பூர், கராக்பூர், ரூர்கி
ஆகிய
உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்
பிடித்துள்ளன. அதுவும் 226-400க்குள் இடைப்பட்ட இடங்களை மட்டும்தான் பிடிக்க முடிந்துள்ளது.
சுதந்திரம் அடைந்திருந்தபோது வெறும்
26 பல்கலைக் கழகங்களையும், 695 கல்லூரிகளையும் மட்டுமே கொண்டிருந்த உயர்கல்வித் திட்டம் இன்று
எண்ணிக்கையில் உயர்ந்துள்ள போதும்,
தரம்
என்கின்றபோது நாம்
எப்படித் தடுமாறுகிறோம் என்பதன் வெளிப்பாடுதான் இந்த
பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல். கற்பித்தல், ஆராய்ச்சி, ஆராய்ச்சி சார்ந்த வெளியீடு என்ற
பல்கலைக்கழகத்தின் மிக
முக்கிய பணிகளின் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நம்
பல்கலைக்கழகங்கள் இப்பணிகளை செய்யவில்லையா என்பதுதான் நம்மிடம் எழும்
மிகப்
பெரிய
கேள்வி.
கற்பித்தலுக்குத் தேவை
சிறந்த
பேராசிரியர்கள். புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகமான "ஸ்டான்போர்டு' தன்
பல்கலைக்கழகத்தில் இத்தனை
பேராசிரியர்கள் நோபல்
பரிசு
பெற்றவர்கள், புக்கர் பரிசு
பெற்றவர்கள் என
உலகப்
புகழ்
மிக்க
பரிசு
பெற்றவர்களையெல்லாம் அவர்களின் பேராசிரியர்கள் என
பெருமிதம் கொள்கிறது. நாம்
நோபல்
பரிசு
பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிக்கா விட்டாலும், குறைந்த பட்சம்,
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் திறன்
பெற்று
விளங்குபவர்களை நியமித்தாலே நாம்
முன்னிலை பெறலாம்.
தன்
தாய்
மொழியில் கூட
சரியாக
எழுதவோ
பேசவோ
தெரியாதவர்களெல்லாம் பேராசிரியர்களாக வந்து
விட்ட
நிலையில், இவர்களிடம் கற்பித்தல் திறனை
நாம்
எப்படி
எதிர்பார்க்க இயலும்?
கற்பித்தல்தான் இப்படி
என்றால், ஆராய்ச்சி எப்படி?
10,781 பி.எச்டி. முனைவர்களை 2008-09ஆம் ஆண்டு உருவாக்கிய நம்
இந்திய
பல்கலைக்கழகங்கள், 2011-12ஆம் ஆண்டு
16,093 பி.எச்டி. முனைவர்களை உருவாக்கி எண்ணிக்கையை உயர்த்தி காட்டியுள்ளதை
கண்டு,
அவசரப்பட்டுப் பாராட்ட வேண்டாம். "இந்திய பல்கலைக்கழகங்கள் தரமற்ற
பி.எச்டி. முனைவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
மாறிவிட்ட'தாக
புகழ்பெற்ற கல்வியாளர் ராஜ்புட் சாடுகிறார். இதை
நம்மால் மறுக்க
முடியுமா?
ஆய்வறிக்கையில் கையெழுத்து மட்டும் போடுவதற்கு, ஆய்வறிக்கையை முழுமையாக எழுதுவதற்கு, புள்ளி
விவரங்களை அலசுவதற்கு, பிழை
திருத்துவதற்கு, வாய்மொழி தேர்வை
மிக
வேகமாக
நடத்தி
குறுகிய காலத்தில் பி.எச்டி. முனைவர் பட்டம் பெறுவதற்கு என
ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மெனு
போட்டு
பணம்
ஈட்டும் பலர்
நம்
பல்கலைக்கழகங்களில் வலம்
வருவதைப் பார்க்க முடிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக