செவ்வாய், 17 டிசம்பர், 2013

நல்லதல்ல...

thanks to dinamani

பொதுவாக, பள்ளிகூடக் கல்வி பயிலும்போது பலவித கட்டுப்பாடுகளுக்கு உட்படவேண்டிய நிலைமையில் இருக்கும் பதின்-இளம்பருவ மாணவர்கள், கல்லூரிவாசலை மிதித்தவுடன் ஒரு புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் சற்று அதிகாரத்துடனேயே தங்களை நடத்திய ஆசிரிய சமுதாயத்திற்கு பதிலாக, தோளுக்கு மிஞ்சி வளர்ந்த தோழர்களாக நடத்துகின்ற கல்லூரி ஆசியர்களின் அறிமுகத்தால் அவர்களது அச்சம் விடுபடத் தொடங்குகிறது.
அச்சத்தை விடுத்து, ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, ஆசிரியர்களை நெருங்கி, தங்களது அறிவைப்பெருக்குவதற்கு பதிலாக, கட்டுப்பாடில்லாத முரட்டுத்தனத்தை சில மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் போதுதான் நிலைமை சிக்கலாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை, ஆண்டு தவறாமல் சென்னைப் பெருநகர மக்களின் இயக்கத்தைச் சீர்குலைக்கும் பேருந்து நாள் கொண்டாட்டம், போக்குவரத்து ஊழியர்களுக்கும்-மாணவர்களுக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் மோதல்கள், பரவலாகக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் கோஷ்டி மோதல்கள் இவையெல்லாம் கட்டுப் படுத்த முடியாத விஷயங்களல்ல.
குறிப்பாக, பேருந்து நாள் கொண்டாட்டங்களை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
ஒரு சமுதாயத்தில், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நிம்மதியைக் கெடுக்கவோ, தனிமனித சுதந்திரத்தை பாதிக்கவோ யாருக்குமே உரிமையில்லை. இதில் மாணவ சமுதாயமும் விதி விலக்கில்லை.
பேருந்து நாள் தொந்தரவு குறித்த தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, பொதுவாக மாணவ சமுதாயத்தினரின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டே, அவர்கள் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதாகவும், அவர்கள் எல்லை மீறும் சமயத்தில் கூட, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தராமல் எச்சரித்து அனுப்புவது வழக்கம் என்றும் தெரிவித்தார்.
ஒன்றிரண்டு முறை வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் விஷயத்தில் இந்த அணுகுமுறை சரி என்றே தோன்றினாலும், எத்தனை முறை எல்லை மீறினாலும் தண்டிக்கப்படமாட்டோம் என்ற தைரியத்தை இது வளர்த்துவிடாமலிருக்க வேண்டும்.
கேள்வி கேட்க யாருமே இல்லை என்ற நிலை, மாணவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்தின் வேறு எந்தப்பிரிவினருக்குமே நல்லதல்ல.
மாணவனின் தவறுகளைக் கண்டித்தால் ஆசிரியரின் உயிரே போய்விடும் என்ற நிலைமை நீடித்தால், இனி நல்லாசிரியர்கள் நமக்குக் கிடைக்கவே மாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக