செவ்வாய், 10 டிசம்பர், 2013

பாடப்புத்தகம், நோட்டுகள் ஜன., 2ல் இலவசமாக வினியோகம்


அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்,
ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் துவங்கும். அப்போது,
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பயிலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும், தலா,
நான்கு ஜோடி சீருடைகள், பாட புத்தகங்கள்,
நோட்டுகள், இலவசமாக வழங்கப்படும், என, பள்ளி
கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்
தெரிவித்தார். அவர், நேற்று கூறியதாவது: வரும், 23ம் தேதி வரை,
அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின்,
தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள்
திறக்கும். அப்போது, அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல்,
ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு,
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்
மற்றும் நான்கு ஜோடி சீருடைகள், இலவசமாக
வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகள், இப்போதே நடந்து வருகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பாட நூல் கழக செயலர்,
அன்பழகன்கூறியதாவது: ஒன்று முதல் ஒன்பதாம்
வகுப்பு வரையிலான, அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,
மாணவியருக்காக, 2.4 கோடி பாட புத்தகங்கள்
அச்சிடப்பட்டு வருகின்றன. 70 சதவீத புத்தகங்கள்,
மாவட்டங்களுக்கு, அனுப்பப்பட்டு விட்டன. 20ம்
தேதிக்குள், 30 சதவீத புத்தகங்களும்,
மாவட்டங்களுக்கு சென்று விடும். எனவே,
தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்த முதல்
நாளன்றே, இலவச புத்தகங்களும், நோட்டுகளும்
வழங்கப்படும். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 1,
பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடவும்,
ஏற்பாடு செய்துவிட்டோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக