'ஆசிரியர் தகுதித் தேர்வு
தொடர்பாக, இனி
தாமதமாக தாக்கலாகும் மனுக்கள் ஏற்கப்படாது. பள்ளிகளில் போதிய
ஆசிரியர்கள் இன்றி
சிரமப்படுகின்றனர். இனியும், 'ரிட்'
மனுக்களை அனுமதித்தால், பள்ளிகள், மாணவர்களின் நிலை
மோசமாகும்' என,
மதுரை
ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
முழு
மதிப்பெண் வேண்டும்: ராஜேஸ்வரி என்பவர் உட்பட,
10 பேர்,
'ஆசிரியர் தேர்வு
வாரியம் சார்பில், 2013 ஆகஸ்டில் நடந்த,
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றோம். 'ஏ'
வகை
வினாத்தாளில், நான்கு
கேள்விகளுக்கு, 'கீ'
பதில்கள் தவறாக
வெளியிடப்பட்டுள்ளன. இதை
ரத்து
செய்து,
சரியான
பதில்
அளித்து, முழு
மதிப்பெண்கள் வழங்க
உத்தரவிட வேண்டும்' என,
மனு
செய்தனர்.
விசாரித்த நீதிபதி, எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தேர்வு வாரியம், தற்காலிக, 'கீ'
பதில்களை வெளியிட்டது. இது
தொடர்பாக சில,
ஆட்சேபனைகள் எழுந்தன. நிபுணர் குழு
ஆராய்ந்தது. பின்,
நவ.,
5ல்
தேர்வு
முடிவு
வெளியானது. இதை
எதிர்த்து, ஐகோர்ட்டில் சிலர்,
மனு
செய்தனர். இதனால்,
புதிதாக ஆசிரியர்களை நியமிக்க முடியாமல், அந்த
நடைமுறை பாதித்தது. அரசு
மற்றும் அரசு
உதவி
பெறும்
பள்ளிகள், தனியார் பள்ளிகளில், போதிய
ஆசிரியர்கள் இன்றி
சிரமப்படுகின்றனர். சில
பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லை
என,
ஒரு
மாணவரே,
ஐகோர்ட்டில் மனு
செய்யும் நிலை
ஏற்பட்டது. தகுதித் தேர்வு
தொடர்பான வழக்குகளை, ஐகோர்ட் அதிக
கவனம்
செலுத்தி, கூடுதல் நேரம்
ஒதுக்கி விசாரித்தது. 'கீ'
பதில்களில், எவை
தவறானவை என,
கோர்ட்
கருதியதோ, அவற்றிற்கு, சரியான
பதில்கள் அடிப்படையில், விடைத்
தாள்களை திருத்த, ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. மறுமதிப்பீடு செய்ய,
ஒரு
மாதக்
கால
அவகாசம் தேவைப்படும். பணி
நியமனத்தில் தாமதம்
ஏற்படும்.
தாமத மனுக்கள் ஏற்கப்படாது:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக