வியாழன், 5 டிசம்பர், 2013

முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு: வணிகவியல் பாடத்திற்கு மறு மதிப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

"முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத் தேர்வில், வணிகவியல் பாடத்தில் பங்கேற்றவர்களின், விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து, முடிவை வெளியிட,' மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஷெர்லி சத்திய சிரோன்மணி, ""ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2013 ல் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (வணிகவியல்) நியமனத் தேர்வில் பங்கேற்றேன். இதில் ஏழு கேள்விகளுக்கு "கீ' பதில்களில், தவறான விடைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு சரியான விடைகள் எழுதியிருந்தேன். எனக்கு, ஏழு கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு:

சரியான விடையை தேர்வு செய்தல் அடிப்படையில், வினாத்தாள் அமைந்துள்ளது. இதில் 2 கேள்விகள் ( 48,63) முரண்பட்டு, கேள்விக்கும், விடைக்கும் தொடர்பின்றி உள்ளன. இவற்றை நீக்கம் செய்து, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். சில கேள்விகளுக்கு, மதிப்பெண் வழங்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில், முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அதனடிப்படையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக