தோழரே
இதுதான் நீதி...
சுயநலமற்று சிந்தியுங்கள் தோழர்களே....
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பணி நியமனத்திக்கு தகுதியாக்கும் ஒரு தேர்வு என்பது அனைவரும் அறிந்ததே.அவரவர்கள் எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றார்களோ அப்பாடத்தில் அவர்களது திறமையைச் சோதிப்பதாக இல்லை எனவே கீழ்கண்ட இரண்டு முறைகளில் ஒன்றுதான் சரியானத் தீர்வாக இருக்கமுடியும்.இவையிரண்டுமே ஏற்கனவே நடைமுறையில் இருந்த பணி நியமன முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் மற்ற எந்த முறையைக் கடைப் பிடித்தாலும் பாதிப்புதான்.
1.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
அல்லது
2. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.
நான் தகுதித்தேர்வு எழுதி தற்போது ஆசிரியப்பணிக்கு தேர்வு ஆனவனும் அல்ல.
தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்காதவனும் அல்ல
என் உறவினர்களும் இவ்வாறு யாரும் இல்லை
இவ்விரண்டு நிலையிலும் இருந்தால் நிச்சயம் சுயநலம் தோன்றும்.
நான் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் கவனித்துப் பாருங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது எனினும் இப்போது கடைபிடிக்கும்முறையை விட நிச்சயம் மேம்பட்டது என்பது புரியும் நன்றி
இக்கருத்தை நாளைய விசாரணையின் போது நீதியரசர்முன் வைத்தால் தீர்வு நிச்சயம்
By S MOORTHY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக