1 "தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு… உவலை கூவர் கீழ மானுண்டெஞ்சிய கலுலி நீரே- யாருடைய பாடல் வரிகள்..
A. பரணர் B. ஓரம்போகியார் C. கபிலர் D .பொன்முடியார்
2. கண்ணகியின் வாழ்க்கையோடு ஒத்த திருமா உண்ணியின் வரலாற்றைத் தெரிவிப்பது
A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு Dகலித்தொகை
3. எட்டுத்தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்டது
A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு D.புறநானூறு
4. "உள்ளது சிதைப்போர் உளரெனப்படார்: எனக்கூறிய புலவர்
A. உகாய்க்கிழார் B. பெருங்கடுங்கோ C.மாமூலர் D.குறுங்குடி மருதனார்
5 .பங்குனி விழா, கார்த்திகைவிளக்கு,,பிள்ளைகளுக்கு ஐம்படைத்தாலி அணிவிக்கும் செய்தியைக் கூறுவது
A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு Dகலித்தொகை
6. குறிஞ்சிக்கலியில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை
A. 39 B. 29 C.35 D.17
7..ஓரங்க நாடகம் போல் பாடல்கள் அமைந்த நூல்
A. ஐங்குறுநூறு B. நற்றிணை C.அகநானூறு D கலித்தொகை
8 .வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாகப் பெற்றுள்ள சங்க நூல்
A. பதிற்றுப்பத்து B. பரிபாடல் C.அகநானூறு D புறநானூறு
9 .நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவுப்பகுதியைப் பரிசாகப் பெற்றவர்
A. ஒளவையார் B. ஆதிமந்தியார் C.வெள்ளி வீதியார் D.கபிலர்
10. 13.அடி சிற்றெல்லையும் 31அடி பேரெல்லையும் கொண்ட எட்டுத்தொகை நூல்
A. குறுந்தொகை B. நற்றிணை C.அகநானூறு D.ஐங்குறுநூறு
11..10 வகை ஆடைகள் 28 வகை அணீகள்,30 வகைப்படைக்கருவிகல் 67 வகை உணவுகள் குறிப்பிடும் நூல்
A. பட்டினப்பாலை B. நற்றிணை C.அகநானூறு D புறநானூறு
12. மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனக் குரிபிடும் நூல்
A. தமிழ்விடுதூது B. சிலப்பதிகாரம் C.அப்பர் தேவாரம் D.திருவாசகம்
13. பத்துப்பாட்டில் வஞ்சியடி பயின்றுவரும் பாடல்
A. முல்லைப்பாட்டு B. குறிஞ்சிப்பாட்டு C.மலைபடுகடாம் D .பட்டினப்பாலை
14. திருமுருகாற்றுப்படையில் அமைந்துள்ள திணை
A. பொதுவியல் B .பாடாண் C .குறிஞ்சி D .மருதம்
15.சிறுபாணாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படும் பாணர்
A .யாழ்ப்பாணர் B. இசைப்பாணர் C.மண்டைப்பாணர் D இவர்களூள் யாரும் இல்லை
16 .கனலி, வல்சி போன்ற அரிய சொற்கள் இடம்பெற்றுள்ள சமுதாயப்பாட்டு என அழைக்கப்படும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை B. பொருநராற்றுப்படை C. திருமுருகாற்ற்ப்படை D பெரும்பாணாற்றுப்படை
17.செலவழுங்குதல் அகத்துறையில் அமைந்துள்ள புறப்பொருள் செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல்
A. முல்லைப்பாட்டு B. பட்டினப்பாலை C.குறிஞ்ச்சிப்பாட்டு D.மலைபடுகடாம்
18.நெடுநல் வாடையினை அகப்பாட்டு என நிறுவியவர்
A. கதிரேசஞ்செட்டியார் B. நச்சினார்க்கினியர் C .உ.வே.சா D.கவிமணி
19.கூடற்றமிழ்,காஞ்சிப்பாட்டு என அழைக்கப்படும் நூல்
A. மதுரைக்காஞ்சி B. குறிஞ்சிப்பாட்டு C.மலைபடுகடாம் D.திருமுருகாற்றுப்படை
20 .கலித்தொகையின் திணை வைப்பு முறை
A. முல்லை குறிஞ்சி மருதம் பாலை நெய்தல் B. முல்லை மருதம் பாலை குறிஞ்சி நெய்தல்
C. குறிஞ்சி மருதம் பாலை நெய்தல்முல்லை D. பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல்
21 மஞ்ஞய் பத்து பாடியவர்
A. மாங்குடி மருதன் B. உருத்திரங்கண்ணன் C .கபிலர் answer D .நக்கீரர்
22 ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர்
A. சேரமன்னர் B. பாண்டிய மன்னர் C. சோழமன்னர் D .பல்லவமன்னர்
23 ".கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான் என புகழ்ந்தவர்
A. அரிசில் கிழார் B. பரணர் C .கபிலர் D .மோசிக்கீரனார்
24." பசைபடு பச்சை நெய்த்தோய்த்தன்ன…..நெடுந்தேர் ஊர்மதி வளவ முடிந்தன்று நாம் முன்னிய வினையே" எனும் அகநானூற்றுப்பாடலைப்பாடியவர்
A. மதுரை மள்ளனார் B. அம்மூவனார் C. பேயனார் D.நக்கண்ணையார்
25.பேரவைக்கோப்பெரு நற்கிள்ளியை மணந்து கொள்ள விரும்புவதாகப் பாடியவர்
A. ஆதிமந்தி B. வெள்ளிவீதியார் C. ஒளவையார் D.நக்கண்ணையார் answer
26. உடன்போக்கு நிகழ்த்திய தலைவனும் தலைவியும் தலைவனும் மீண்டுவருதற்கன் நிகழும் கூற்றைப் பாடுபொருளாக்க் கொண்ட்து
A. அன்னாய்ப்பத்து B. அச்சோப்பத்து C. மறுதரவு பத்து D. மஞ்ஞய் பத்து
27.வேண்டுவது நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் கடவுளரையோ பிறவற்றையோ வேண்டிக்கோடல்
A. பராய்க்கடன் உரைத்தல் B.எதிர் உரைத்தல் C .பலியிடுதல் D.தெண்டமிடல்
28.ஓதலாந்தையார் பாடிய மறுதரவுப் பத்து எத்திணைக்குரியது?
A. குறிஞ்சி B. முல்லை C. பாலை D. நெய்தல்
29 காடுகளுக்கும், மதுரைக்கும் பாடல்கள் இடம்பெற்றிருந்த நூல்
A. கலித்தொகை B. பரிபாடல் C.அகநானூறு D.புறநானூறு
30.பெருந்தொகை நானூறு என்று அழைக்கப்படும் நூல்
A. ஐங்குறுநூறு B. பரிபாடல் C.அகநானூறு D.புறநானூறு
31.பெண்கள் பிறந்தவீட்டுக்கு உரியவர் அல்லர் எனும் செய்தி கூறும் எட்டுத்தொகை நூல்
A. கலித்தொகை B. பரிபாடல் C.அகநானூறு D.புறநானூறு
32. புண்ணூமிழ் குருதி, பூத்த நெய்தல்,மறம் வீங்கு பல்புகழ் போன்ற பாடலின்சிறப்பான தொடர்கள் தலைப்பாக சூட்டப்பட்டுள்ள நூல்
A. முல்லைப்பாட்டு B. குறிஞ்சிப்பாட்டு C. மதுரைக்காஞ்சி D பதிற்றுப்பத்து
33.புரோசு மயக்கி என தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமை அடைந்தவன்
A. கோப்பெருஞ்சோழன் B.செல்வக்கடுங்கோ வாழியாதன் C. நெடுஞ்செழியன் D செங்குட்டுவன்
34.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை வண்ணம் தூக்கு பாடலின் பெயர் ஆகிய குறிப்புகள் உடையது
A. கலித்தொகை B. பரிபாடல் C.பதிற்றுப்பத்து D.புறநானூறு
35.புறநானூற்றில் அதிகமானப் பாடல்களைப் பாடியவர்
A. கபிலர் B. பரணர் C. ஒளவையார் D.நக்கண்ணையார்
36 .நீலம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர்க்கு அமர்ந்தன்ன் கொடுத்த எனும் பாடல்வரிகளுக்குரிய மன்னன்
A. பாரி B. அதியன் C. ஆய் D நல்லியங்கோடன்
37. பத்துப்பாட்டில் நகரங்கள் பெயரில் அழைக்கப்படும் நூல்களின் எண்ணிக்கை
A. இரண்டு B. ஒன்று C. நான்கு D ஏதும் இல்லை
38 .சான்றோர் உரைத்த தண்டமிழ் தெரியல் என பத்துப்பாட்டினைப் பாராட்டுபவர்
A. நச்சினார்க்கினியர் B. இளம்பூரணர் C. பேராசிரியர் D மயிலைநாதர்
39 ,பொருநராற்றுப்படையில் இடம்பெறும் பொருநர்
A. ஏர்க்களம் பாடுநர் B. போர்க்களம் பாடுநர் answer C. பரணி பாடுநர் D யாழ்ப்பானர்
40 எட்டுக்கு அடுத்து ஒன்பது என்பதற்கான எண்ணுப்பெயர் தொண்டு எனும் சொல் என்பதை குறிப்பிடும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை B. பொருநராற்றுப்படை C. மலைபடுகடாம் D பெரும்பாணாற்றுப்படை
41.கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைசிறந்தவர் ஆகிறார் என்று பாராட்டுபவர்
A. தனிநாயக அடிகளார் B. உ.வே.சா C.திரு.வி.க D தமிழண்ணல்
42.வீரனாகிய மகன் தங்கியிருந்த வயிறு புலி தங்கியிருந்த குகைக்கு ஒப்பானது எனப் பாடியவர்
A. நக்கண்ணையார் B. காவற்பெண்டு answer C. பொன்முடியார் D ஒளவையார்
43 .வெறியாடலின் சிறப்பைப் பாடிய பெண்பாற்புலவர்
A. நக்கண்ணையார் B.வெண்ணிக்குயத்தியார் C. காமக்கண்ணீயார் Dநப்பசளையார்
44.சேரமான் பெருஞ்சேரலாதனின் மான உணர்வினை சிறப்பித்துப் பாடியவர்
A. காவற்பெண்டு B.வெண்ணிக்குயத்தியார் C. காமக்கண்ணீயார் D நப்பசளையார்
45 .பாண்டிய அரசியான பெண்பாற்புலவர்
A. பெருங்கோப்பெண்டு B. காவற்பெண்டு C. வெண்பூதியார் D பொன்மணியார்
46 ".மா மேயல் மரப்ப, மந்திகூ கூர…." என கூதிர்காலத்தின் துன்பத்தைக் கூறும் நூல்
A. முல்லைப்பாட்டு B. குறிஞ்சிப்பாட்டு C. மலைபடுகடாம் D நெடுநல்வாடை answer
47. தொண்டிப்பத்தினைப் பாடியவர்
A. அம்மூவனார் B. கபிலர் C பேயனார் D .ஊரம்ப்பொகியார்
48. ஒரேருழவனார் பாடிய பாடல் இடம்பேற்றுள்ள நூல்
A. ஐங்குறுநூறு B. பரிபாடல் C.அகநானூறு D. குறுந்தொகை
49 பொருந்தாதைச் சுட்டுக
A. க.சுப்பிரமணியப்பிள்ளை B. சிவராசப்பிள்ளை [answer] C.சாமிநாத அய்யர் D தேவநேயப்பாவாணர்
50. "அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை" எனக்குறிப்பிடுவது
A. பெரிய புராணம்'. B. அகநானூற்று உரைப்பாயிரம்
C. இறையனார் களவியல் உரை D .திருவாய்மொழி
வெற்றியைத் தொட்டுவிட தூரம் 60 நாட்களே…..
வாழ்த்துக்கள்
சிறந்த பயிற்சிக்கு தொடர்புகொள்க: தருமபுரி: 9865632829 மதுரை :இனிமை பயிற்சி மையம் 9865632829
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக