வியாழன், 6 நவம்பர், 2014

தரமான கல்வி:மாணவர்கள் ஆலோசனை வழங்க யு.ஜி.சி., அழைப்பு

மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ள, 'அனைவருக்கும் தரமான கல்வி' திட்டம் குறித்து, மாணவர்களிடம்
ஆலோசனை நடத்தும்படி, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: சர்வதேச மாணவர்கள் நாள், நவ., 17ம்
தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, மாணவர்கள் தங்கள் நாடு குறித்த கருத்துக்களையும், நாட்டின் முன்னேற்றத்திற்கானபுதிய வழிகள் குறித்தும் பகிர்ந்து கொள்வர். எனவே, மத்திய அரசின், 'சிக் ஷித் பாரத்; சாக் ஷம் பாரத்' எனும், அனைவருக்கும் தரமான கல்வி, குறித்து, மாணவர்களுக்கான
கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சிறப்பான கருத்துக்கள், ஆலோசனைகளை கூறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, டில்லிக்கு அழைக்கப்படுவர். அவர்கள்,மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஆலோசிக்க அனுமதிக்கப்படுவர். மாணவர்கள்
கூறும் கருத்துக்கள், பார்லிமென்ட்டில், கல்வி தொடர்பான விவாதத்தின் போது, அமைச்சரால் எடுத்து வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக