வெள்ளி, 14 நவம்பர், 2014

குரூப் - IV வினா-விடை வரலாறு - 1

குரூப் - IV வினா-விடை வரலாறு -1

351. சிப்பாய் கலகம் எப்போது ஏற்பட்டது?

352. மகாபலிபுரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?

353. குதுப்மினாரை கட்டியது யார்?

354. பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர் என்ன?

355. கனிஷ்கர் ஆதரித்த புத்த மதம் எது?

356. ஹீனயானம் என்னும் புத்த மத பிரிவை ஆதரித்தவர் யார்?

357. பிரம்ம சமாஜத்தை தொடங்கியவர் யார்?

358. சதியை ஒழிக்க பாடுபட்டவர் யார்?

359. சதியை ஒழிக்க சட்டம் கொண்டுவந்தவர் யார்?

360. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?

361. அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது அவரது வயது என்ன?

362. காந்திஜியின் தண்டி யாத்திரை எப்போது நடந்தது?

363. வேதாரண்யத்தில் உப்பு யாத்திரையை தலைமையேற்று நடத்தியவர் யார்?

364. வங்காளதேசத்தின் முதல் பிரதமர் யார்?

365. பாகிஸ்தான் எப்போது சுதந்திரம் பெற்றது?

366. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என கூறியவர் யார்?

367. இலங்கைக்கு சென்ற அசோகரின் மகன் யார்?

368. திப்பு சுல்தான் ஆட்சியின் தலைநகரம் எது?

369. முதல் பானிபட் போர் எப்போது நடந்தது?

370. மிண்டோ மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?

371. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

372. சுதந்திரப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடந்தது?

373. ஆங்கிலக் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

374. பிரெஞ்சு புரட்சி எப்போது நடந்தது?

375. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

376. மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர் யார்?

377. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர் யார்?

378. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?

379. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?

380. வங்கப் பிரிவினைக்கு காரணமானவர் யார்

381. சுமேரிய நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

382. அமெரிக்க சுதந்திர போராட்டம் எப்போது நடந்தது?

383. ஹர்சர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரீகர் யார்?

384. குப்தர் காலத்தில் சிறந்துவிளங்கிய மருத்துவர்கள் யாவர்?

385. மவுரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்?

386. குப்த சாம்ராஜ்யம் அழிய காரணமானவர்கள் யார்?

387. ஹர்ஷ சரிதத்தை எழுதியவர் யார்?

388. அடிமை வம்சத்தின் தலைசிறந்த மன்னன் யார்?

389. இந்துக்களுக்கு ஜெஸீயா வரியை விதித்தவர் யார்?

390. இந்தியாவில் பீரங்கியை முதல்முதலில் பயன்படுத்திய மன்னர் யார்?

391. வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?

392. கல்லணையை கட்டியவர் யார்?

393. சேரர்களின் கொடி எது?

394. அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?

395. அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?

396. அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?

397. தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?

398. நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?

399. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?

400. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன

விடைகள்:
351. 1857
352. பல்லவர்கள்
353. குத்புதீன் ஐபெக்
354. பாட்னா
355. மகாயாணம்
356. அசோகர்
357. ராஜாராம் மோகன்ராய்
358. ராஜாராம் மோகன்ராய்
359. பெண்டிங் பிரபு
360. ராஜராஜ சோழன்
361. 12
362. 1930
363. ராஜாஜி
364. முஜுபூர் ரகுமான்
365. 14.8.1947
366. பாலகங்காதர திலகர்
367. மகேந்திரா
368. ஸ்ரீரங்கப்பட்டினம்
369. கி.பி.1526 (பாபர் - இப்ராஹீம் லோடி)
370. 1909
371. மும்பை
372. அமெரிக்கா - இங்கிலாந்து
373. வில்லியம் பெண்டிங் பிரபு
374. 1789-1799
375. சுவாமி தயானந்த சரஸ்வதி
376. ஷாஜகான்
377. முகமது பின் காசிம்
378. அம்ரிஸ்டர்
379. லாலா லஜபதி ராய்
380. கர்சன் பிரபு
381. யூப்ரடீஸ் டைகரீஸ்
382. 1776
383. யுவான் சுவாங்
384. சரகர், சுஸ்ருதர்
385. அசோகர்
386. ஹூனர்கள்
387. பாணர்
388. பால்பன்
389. அவுரங்கசீப்
390. பாபர்
391. நரசிம்ம வர்ம பல்லவர்
392. கரிகால் சோழன்
393. வில் கொடி
394. அபுல் பாசல்
395. அயினி அக்பரி, அக்பர் நாமா
396. பதேபூர் சிக்ரி
397. சித்தரஞ்சன்தாஸ்
398. வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்
399. 1858
400. 1990

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக