வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL: பாரதம் பாடிய பெருந்தேவனார்


    பாரதம் பாடிய பெருந்தேவனார்: இவர் தொண்டை நாட்டினர்; தமிழில் பாரத கதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர். அந்நூல் செய்யுட்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்திலும் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றிலும் மேற்கோளாகக் காணப்படும். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவருடைய கடவுள் வாழ்த்துக்கள் ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் ஐந்து தொகை நூல்களில் உள்ளன. முதல் மூன்றிலும் உள்ளவை சிவபெருமான் துதிகளாகவும், நற்றிணையில் உள்ளது திருமால் துதியாகவும், குறுந்தொகையில் உள்ளது முருகக் கடவுள் துதியாகவும் உள்ளன. நற்றிணை முதலிய தொகை நூல்களில் இவருடைய கடவுள் வாழ்த்துக்கள் முதலில் வைக்கப் பெற்றிருத்தலும் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை இவர் இயற்றி இருத்தலும் இவருடைய முதன்மையையும் கல்விப் பெருமையையும் விளக்கும். மேற்கூறிய கடவுள் வாழ்த்துச் செய்யுட்களையும் பாரதத்தையும் அன்றி, இவர் இயற்றியனவாகத் திருவள்ளுவ மாலையில் ஒரு செய்யுளும் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக